முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் முழு நீதியரசர் குழுவுக்கு இல்லை

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை முழுமையான உயர் நீதிமன்ற நீதியரசர் குழுவொன்றின் முன்னிலையில் விசாரணை…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் முழு நீதியரசர் குழுவுக்கு இல்லை

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை முழுமையான உயர் நீதிமன்ற நீதியரசர் குழுவொன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழுவின் முன்னிலையில் இன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.ஏ. சுமந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தற்போது உயர் நீதிமன்றத்தில் பதவி வகிக்கும் அனைத்து நீதியரசர்களும் அடங்கிய முழுமையான நீதியரசர் குழுவின் முன்னிலையில் இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரினார்.

மேலும், ஏனைய மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி, ஜெஃப்ரி அழகரத்தினம், எராஜ் சில்வா, ஸ்ரீநாத் பெரேரா, அனுர மெத்தேகொட மற்றும் மைத்திரி குணரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்தனர்.

எவ்வாறாயினும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயரத்ன, நீதியரசர் குழுவொன்றின் அமைப்பை தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 132(3) உறுப்புரையின் கீழ், நீதியரசர் குழுவில் இடம்பெற வேண்டிய நீதியரசர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு உள்ளதாகவும், அது தொடர்பில் வேறு எந்தத் தரப்பினராலும் தலையிட முடியாது என்றும் சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

இடையீட்டு மனுதாரர் ஒருவரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நைஜல் ஹெச் உள்ளிட்ட சட்டத்தரணிகளும், நீதியரசர் குழுவின் அமைப்பை தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் பரிசீலித்த பின்னர், ஐவர் அடங்கிய நீதியரசர் குழு, இந்த மனுக்களை முழுமையான நீதியரசர் குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்