அதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய சீட் பெல்ட் பாதுகாப்பு விதிமுறைக்கு இணங்கத் தவறிய சுமார் 3,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்ததாவது, பெரும்பாலான வாகன சாரதிகளும் பயணிகளும் சட்டத்திற்கு இணங்க செயற்பட்டு வருகின்ற போதிலும், சிலர் தொடர்ந்தும் இந்த விதிமுறையை மீறி வருகின்றனர்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு விதிமுறை செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.




