22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, இந்த மனுக்கள் இன்று (01) காலை 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.




