முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200–260 ஆண்டு சிறை

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சதி, உதவி மற்றும் உடந்தை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் 2…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200–260 ஆண்டு சிறை

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சதி, உதவி மற்றும் உடந்தை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் 200 முதல் 260 ஆண்டுகள் வரையான கடூழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

குற்றவாளிகள் ஐந்து பேருக்கு தலா 200 ஆண்டுகளும், மேலும் ஐந்து பேருக்கு தலா 220 ஆண்டுகளும், நான்கு பேருக்கு தலா 240 ஆண்டுகளும், ஒருவருக்கு 260 ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கும் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் அரசுடைமையாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவுபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. வழக்கின் இறுதியில் 15 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டதுடன், ஏனைய ஒன்பது பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்